அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? வெளியான நியூ அப்டேட்!

அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக இணையும் படம் கைவிடப்படலாம் என்ற தகவல் சமீபத்தில் பரவி வந்தது. படத்தின் இறுதிக்கதை அல்லு அர்ஜுனுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும், இதனால் படம் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தத் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாததால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த வதந்திகளை அல்லு அர்ஜுன் தரப்பு மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணையும் படம் கைவிடப்படவில்லை என்றும், தற்போது பரவி வரும் செய்திகள் உண்மையற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது ‌.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தற்போது அட்லி இயக்கத்தில் ‘ராக்கா’ என்ற பிரம்மாண்டமான படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் நிலையில், விரைவில் லோகேஷ் கனகராஜ் – அல்லு அர்ஜுன் படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading