குரு சோமசுந்தரம், அனுமோல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாரிஸ் கபே’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. சரஜ்சீலன் இயக்கத்தில் ‘முகமூடி’ புகழ் கே இசையமைத்துள்ள இப்படம் தொடர்பான பல்வேறு தகவல்கள் நிகழ்ச்சியில் பகிரப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய குரு சோமசுந்தரம், பெண்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற்றத்தை அடைய முடியாது எனக் குறிப்பிட்டார். இப்படத்திலும் முக்கியமான சமூகக் கருத்து ஒன்றை பேசியிருப்பதாக அவர் தெரிவித்தார்.திரைப்படத்தில் தனது மனைவி கதாபாத்திரத்தில் அனுமோல் நடித்திருப்பதாகக் கூறிய குரு சோமசுந்தரம், இதற்கு முன்பும் இருவரும் ஒரு மலையாளப் படத்தில் இணைந்து நடித்துள்ளதாக தெரிவித்தார். அனுமோல் சிறப்பாக நடிக்கக்கூடியவர் என்றும், நிகழ்ச்சியின்போது அவரை நகைச்சுவையாக கலாய்த்ததாகவும் அவர் கூறினார்.
குரு சோமசுந்தரத்தின் நடிப்பை ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் பார்த்து ரசித்ததாக தெரிவித்தார். இசையமைப்பாளர் கே ஏற்கனவே சில மலையாளப் படங்களுக்கு இசையமைத்து, அந்தப் படங்களின் பாடல்கள் வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ‘பாரிஸ் கபே’ திரைப்படத்திற்கும் பாரிஸ் நகரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை ரசிகர்கள் படம் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என அனுமோல் சுவாரஸ்யமாக தெரிவித்தார்.
—
