ஒரே வெள்ளிக்கிழமை போதும்… பான்-இந்தியா அடையாளம் குறித்து யஷ் டாக்!

‘கேஜிஎப்’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராக உயர்ந்துள்ள யஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சர்வதேச ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் படக்குழு தீவிரமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற ஹிந்தி நேர்காணலில் யஷிடம், “அல்லு அர்ஜுன், ராம் சரண், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஆரம்பகாலத்தில் கிடைக்காத பான்-இந்தியா ஸ்டார் என்ற அடையாளம் உங்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமானது?” என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த யஷ், ஒரு நடிகரின் வெற்றி என்பது எப்போதும் நிலையானது கிடையாது என்று கூறியுள்ளார். “ஒரே ஒரு வெள்ளிக்கிழமை எல்லாவற்றையும் மாற்றிவிடும். ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால், அந்தப் படத்துடன் சேர்ந்து பான்-இந்தியா என்ற அடையாளமும் காணாமல் போய்விடும்” என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading