தமிழ் சினிமாவிற்கு அவரைப் போன்ற கலைஞர்கள் இன்னும் அதிகமாக தேவைப்படுகிறார்கள்‌ … நடிகை அனுமோல்!

சரஜ் சீலன் இயக்கியுள்ள திரைப்படம் குரு ‘பாரிஸ் கபே’. இப்படத்தில் சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகை அனுமோல், “திரைத்துறையில் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் சினிமா தொடர்பாக புதிது புதிதாக பல விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் புதுமையானதையும், அவர்களுக்கு அவசியமானதையும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாக உள்ளது. அந்த சிந்தனையை மனதில் வைத்துக்கொண்டுதான் என்னுடைய கதாபாத்திரங்களையும் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறேன்.

இந்தப் படத்தில் குரு சோமசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியது மிகவும் நல்ல அனுபவமாக அமைந்தது. இதற்கு முன்பாகவே நாங்கள் இருவரும் ஒரு மலையாள திரைப்படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறோம். அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தை கொலை செய்யும் வேடத்தில் நான் நடித்திருந்தேன். அவர் மிகவும் எளிமையாக பழகக்கூடியவர். இருப்பினும், என்னை அடிக்கடி கிண்டல் செய்வதை மட்டும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்போதும் என்னிடம், நான் அழகாக இல்லை என்றும், மற்றொரு நடிகை அழகாக இருப்பதாகவும் நேரடியாகக் கூறிக்கொண்டிருப்பார். இதுபோன்ற பேச்சுகளால் எங்களுக்குள் சண்டையும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்படியான செல்லமான மோதல்கள் எங்களுக்குள் அடிக்கடி நடைபெறும். அவரது நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடித்தமானது. அவரைப் போன்ற சிறந்த கலைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading