ஜனவரி 12-ல் வெளியாகிறது சாய் துர்கா தேஜின் ‘சம்பராலா எடிகட்டு’!

பீரியட் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் ‘சம்பராலா எடிகட்டு’ திரைப்படத்தில் சாய் துர்கா தேஜ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஜெகபதி பாபு, சாய் குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

ரோஹித் கே.பி. இயக்கும் இப்படத்தை ‘ஹனுமான்’ படத்தின் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி இணைந்து தயாரிக்கின்றனர். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கும் இப்படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன.

படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘சம்பராலா எடிகட்டு’ திரைப்படம் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகும் இப்படம், பான்-இந்தியா அளவில் உருவாகும் அதிரடி திரைப்படமாக ரசிகர்களை சென்றடைய உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading