‘டிசி’ திரைப்படத்தை பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன், தனது எக்ஸ் தளத்தில் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “டிசி ஒரு தமிழ் கிளாசிக் திரைப்படம். சினிமாவை விரும்பும் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படமாக இது உள்ளது. புரிந்துகொள்பவர்களுக்கு இப்படம் ஒரு கவிதை” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தை உயரிய மரியாதைக்குரியது என பாராட்டியதுடன், அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Add a Comment
