1985-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் ‘ஒரு கைதியின் டைரி’. இப்படத்தில் ராதா, ரேவதி, மலேசியா வாசுதேவன், ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தற்போது இதே பட தலைப்பில் ஒரு புதிய படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார். சாந்தனு மற்றும் சீமான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
மதுரையை கதைக்களத்தின் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் இடையேயான உறவை மையமாகக் கொண்டுள்ளது. குடும்ப உணர்வுகளுடன் ஆக்ஷன் மற்றும் பரபரப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக திரைப்படம் உருவாகவுள்ளது.தென் தமிழகத்தின் வாழ்வியலும், தந்தை – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன. கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 10-வது படமாகவும் இது உருவாகிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
—
