Advertisement

“விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” முதல் நாள் வசூல் எவ்வளவு?

சூர்யா, மமிதா பைஜு, ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”. இப்படம் முதல் நாளில் சுமார் ரூ.30 கோடியை வசூலித்திருக்கலாம் என முதற்கட்ட பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.20 கோடியும், வெளிநாடுகளில் ரூ.10 கோடியும் வசூலித்திருக்கலாம் என கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமும் இயக்குநரும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பதால், தெலுங்கு மாநிலங்களிலும் படத்திற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளது.

முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான “கருப்பு” திரைப்படம் முதல் வார இறுதியில் ரூ.147 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முதல் வார முடிவில் கருப்பு சாதனையை தாண்டுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply