‘மண்ணின் வீரம்.. மயிலோனின் தீரம்!’ – வெளியான ‘சேயோன்’ சிறப்பு போஸ்டர்!

‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் அடுத்தகட்ட பணிகளை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளனர். கதையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகரும் நிலையில், முக்கியமான பல காட்சிகள் இந்த ஷெட்யூலில் படமாக்கப்பட உள்ளன.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘சேயோன்’ படக்குழு ரசிகர்களுக்காக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘மண்ணின் வீரம்.. மயிலோனின் தீரம்!’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading