Advertisement

ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நிவின் பாலியின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” டிரெய்லர் !

“பிரேமலு” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கதையில் முழுமையான திருப்தி ஏற்படாததால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதன் பின்னர் அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம்தான் “பெத்லகேம் குடும்ப யூனிட்”.

நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன் ஆகியோர் பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

படத்தின் முதல் பாடலான “மாந்திரீகம்” சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலானது. இந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் “பெத்லகேம் குடும்ப யூனிட்” திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply