மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் “அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே” திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
முன்னதாக “அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்”, “அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்” போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். ராபர்ட் டவுனி ஜூனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஷூரி, கிறிஸ் எவன்ஸ், ஜேம்ஸ் மார்ஸ்டன், வனேசா கிர்பி, ரெபேக்கா ரோமிஜின் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர்.
மார்வெல் காமிக்ஸ் உலகின் பிரபல வில்லனான டாக்டர் டூம் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதுவரை அயர்ன் மேனாக ரசிகர்களை கவர்ந்த ராபர்ட் டவுனி ஜூனியர், தற்போது டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.blரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு விளம்பரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
—
