Advertisement

திரையுலகில் 22 ஆண்டுகள்.. நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட விஷால்!

xr:d:DAFn3BU4NH4:97,j:5079335444443356337,t:23082620

திரையுலகில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் விஷால், தனது சினிமா பயணம் குறித்து சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் சினிமா மீதான ஆர்வத்துடன் தனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் விஷால், சங்கக் கட்டிடம் கட்டி முடிந்த பிறகே திருமணம் செய்துகொள்வேன் என ஏற்கெனவே கூறியிருந்தார். தற்போது அந்த கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நடிகை சாய் தன்ஷிகாவுடன் விஷால் காதலில் இருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைத்துறை சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும், மாணவர்களின் கல்விக்காகவும் விஷால் பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறார். பொருளாதார சூழல் காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலம் அவர் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்.

நடிப்புடன் இயக்கத்திலும் தனது கவனத்தை திருப்பியுள்ள விஷால், ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அவரே நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாகவும், அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. 22 ஆண்டுகால திரைப்பயணத்தை நினைவுகூர்ந்துள்ள விஷால், இனிவரும் காலங்களிலும் அதே அர்ப்பணிப்புடன் சினிமா பயணத்தை தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply