Advertisement

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’.. வெளியான ‘ஆசை வரமே’ பாடல்!

அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். ஆக்‌ஷன் மற்றும் காதலை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

‘அன்பில் அவன்’ படத்தின் முதல் பாடலான ‘ஆசை வரமே’ சமீபத்தில் வெளியிடப்பட்டது. மெட்ராஷி எழுதியுள்ள இப்பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ளனர். காதல், ஆக்‌ஷன் ஆகிய இரு அம்சங்களையும் இணைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

—

Add a Comment

Leave a Reply