அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’. இக்கால இளைஞர்களின் காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே வெளியான ‘வா கண்ணம்மா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
கடந்த ஆண்டே திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘ஒன்ஸ் மோர்’, சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸை முன்னிட்டு படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வரும் நிலையில், ‘ஒன்ஸ் மோர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பதில் சொல்’ என்ற கவிதை தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் கவிதையை படத்தின் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ளார்.
