விஜய் சேதுபதியின் நடிப்பில் ‘தலைவன் தலைவி’, ‘காந்தி டாக்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘பத்தா’, ‘ட்ரெயின்’, ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதனிடையே ‘அரசன்’, ‘பாக்கெட் நாவல்’ உள்ளிட்ட படங்களிலும் அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலான ஒரு மகிழ்ச்சியான, கலகலப்பான திரைப்படத்தில் நடிக்க தனக்கு நீண்ட நாட்களாக ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், தான் எதிர்பார்க்கும் அந்த வகையான கதைக்களம் இதுவரை அமையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல விதமான கதைகளும், வித்தியாசமான கதாபாத்திரங்களும் குறித்து இயக்குநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வந்தாலும், அடுத்த படத்திற்காக இதுவரை எந்தக் கதையும் இறுதி செய்யப்படவில்லை என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.தற்போது தன்னை சந்திக்கும் பெரும்பாலான இயக்குநர்கள் ஆக்ஷன் கலந்த வலுவான கதைகளையே முன்வைத்து வருவதாகக் கூறியுள்ள அவர், அதே நேரத்தில் தான் விரும்பும் ஜாலியான கதைக்கான தேடலையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
—
