Advertisement

ஆகஸ்ட் 20-ல் வெளியாகிறது ‘கலிபா’.. முடிந்தது படப்பிடிப்பு!

பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கலிபா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வைசாக் இயக்கும் இப்படத்தில் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பழிவாங்கும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜினு ஆபிரகாம் கதை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே பிருத்விராஜ் நடித்த ‘ஆடம் ஜோன்’, ‘கடுவா’ உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

லண்டனில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு, தொடர்ந்து லண்டன், துபாய், நேபாளம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இப்படத்தில் மோகன்லால் மாஃபியா டான் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘கலிபா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையொட்டி தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

—

Add a Comment

Leave a Reply