நடிகை ஸ்ரேயா சரண் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழக முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஸ்ரேயா சரண், மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தபோதிலும் அவர் எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுவதில் விஜய் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய் செயல்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் ஸ்ரேயா சரண் தெரிவித்துள்ளார். மேலும், வரும் காலங்களிலும் தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் பயணம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நடிகை ஸ்ரேயா சரண் குறிப்பிட்டுள்ளார்.
