தமிழ் திரையுலகில் வேகமாக கவனம் பெற்று வரும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தற்போது முன்னணி நடிகர்கள் நடிக்கும் பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறுகிய காலத்திலேயே அவர் கைவசம் மொத்தம் 12 திரைப்படங்கள் மேல் உள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
விஜய் சேதுபதியின் பத்தா, தனுஷின் ஓம் மற்றும் தமிழ் முருகன் ஆகிய படங்கள் அவரது முக்கிய திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. அதோடு சூர்யா 48, பிரதீப் ரங்கநாதனின் PRS01, ராகவா லாரன்ஸின் பென்ஸ், கார்த்தியின் மார்ஷல் போன்ற படங்களுக்கும் இசையமைக்கிறார்.
தமிழைத் தாண்டியும் அவரது பயணம் விரிகிறது. அல்லு அர்ஜுனின் ராக்கா, துருவ் விக்ரமின் அடுத்த படம், சிவகார்த்திகேயனின் புதிய படம் ஆகியவற்றிலும் சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். மேலும் சிம்புவை மையமாகக் கொண்ட இரண்டு வேறு படங்களுக்கும் அவர் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் கைவசம் இருப்பதால், சாய் அபயங்கர் விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
