“இனி ஹீரோவாகவே தொடர விரும்புகிறேன்” – ஆரவ் !

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ், பின்னர் மார்க்கெட் ராஜா, ராஜ பீமா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதே சமயம் விடாமுயற்சி, கலகத் தலைவன் போன்ற படங்களில் வில்லனாகவும் கவனம் பெற்றார். சமீபத்தில் வெளியான அருள்வான் படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது.

தற்போது இரண்டு தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் அவர் நடித்து வருகிறார். படங்களுக்கு இடையே இடைவெளி இருப்பது குறித்து பேசும்போது, “வாய்ப்புகள் இல்லாததால் அல்ல; நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்” என்று ஆரவ் தெரிவித்துள்ளார்.“சினிமா நீண்ட பயணம். வெறும் கடமைக்காக படம் நடிக்க விரும்பவில்லை. ரசிகர்கள் நினைவில் நிற்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றும் அவர் கூறினார்.

மேலும், “என்னைப் போல நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் பல நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் வெற்றிகளைப் பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.வில்லன் வேடங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும், இனிமேல் தனது முக்கிய கவனம் கதாநாயகன் வேடங்களில்தான் இருக்கும் என்றும், நல்ல கதைகளை தயாரிப்பாளர்களிடம் கொண்டு சேர்க்க ஒரு தனி குழுவையும் அமைத்துள்ளதாகவும் ஆரவ் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading