Advertisement

“ஏன் நீங்க நடிக்க வரணும்?” என்று லோகேஷிடம் கேட்டேன்… அனிருத் பகிர்ந்த சுவாரஸ்யம்!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டிசி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் வாமிகா கேபி நாயகியாக நடித்திருக்க, சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையை அனிருத் அமைத்துள்ள நிலையில், பாடல்களும் பின்னணி இசையும் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சமீபத்திய நேர்காணலில் கலந்து கொண்ட அனிருத்திடம் லோகேஷ் கனகராஜின் ஹீரோ அறிமுகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர் சிரித்தபடி, “நாங்கள் பல வருடங்களாக நல்ல நண்பர்கள். தென்னிந்திய ரசிகர்களிடம் எங்கள் கூட்டணி எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. அவர் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று முதலில் கேட்டபோது, ‘ஏன் நீங்க நடிக்க வரணும்?’ என்பதுதான் என் முதல் ரியாக்ஷன்” என்று கூறினார்.

அதே நேரத்தில், “இப்போது படத்தைப் பார்த்த பிறகு, குறிப்பாக அருண் மாதேஸ்வரனுடன் இணைந்தது சரியான முடிவாகவே தெரிகிறது. எல்லாமே மிகவும் நன்றாக வேலை செய்திருக்கிறது” என்றும் அனிருத் தெரிவித்தார்.இசை அமைக்கும் முறையைப் பற்றி பேசும்போது, “லோகேஷ் என்னை முழுமையாக நம்புவார். கதையை மட்டும் விவரமாகச் சொல்வார். சில சமயம் படப்பிடிப்பு காட்சிகளையும் காட்டுவார். அதற்கு பிறகு இசை குறித்து பெரிய விவாதங்கள் எதுவும் இருக்காது. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விடுவார்” என்று அனிருத் கூறினார்.

Add a Comment

Leave a Reply