31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து “மேரிகோல்ட்” என்ற படத்தில் நடிக்கும் பிரபு – சுகன்யா

புதிய குடும்பப் படைப்பாக “மேரிகோல்ட்” என்ற திரைப்படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 21-வது படமாக உருவாகும் இதை ஆர். ரவீந்திரன் தயாரிக்க, பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தின் முக்கிய சிறப்பாக, பல ஆண்டுகளுக்கு பிறகு பிரபு மற்றும் சுகன்யா மீண்டும் ஒரே படத்தில் நடிக்கிறார்கள். செந்தமிழ்ப் பாட்டு, சின்ன மாப்ளே, மிஸ்டர் மெட்ராஸ் ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, 31 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் மீண்டும் தோன்ற இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரக்ஷன் மற்றும் நம்ரிதாவும் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கின்றனர்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளை மையமாகக் கொண்ட இந்தக் கதை, தென் தமிழக மக்களின் வாழ்வியல், குடும்ப உறவுகள் மற்றும் இரு நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையிலான சுவாரஸ்யமான போட்டியை உணர்ச்சிபூர்வமாக சொல்லும் வகையில் உருவாகி வருகிறது.

மேலும், சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் முருகன் உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.ஒளிப்பதிவை மல்லிகார்ஜுன் மேற்கொள்கிறார். இசையை சித்து குமார் அமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர். நிர்மல் கவனிக்கிறார். படப்பிடிப்பு மற்றும் பிற அப்டேட்கள் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading