“மூக்குத்தி அம்மன் 2” ஓடிடி உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்றதா?

நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தை இந்த முறை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்துள்ளார். சினேகா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி உள்ளிட்ட பல நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். யோகி பாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி மற்றும் விச்சு விஸ்வநாத் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்திருந்தாலும், இதுவரை திரைப்படம் வெளியீட்டை காணவில்லை. இதனால் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட்களை எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் சுமார் ரூ.50 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்ப பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கக்கூடிய படம் என்பதால் இந்த பெரிய தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading