Advertisement

அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய ஜூனியர் என்டிஆர்!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர், தற்போது பல பெரிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பிரசாந்த் நீல் இயக்கும் “டிராகன்” படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் செகந்திராபாத் நகரில் உள்ள KIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், டாக்டர் பூர்ணாசந்திரா மற்றும் டாக்டர் நிதின் தலைமையிலான குழு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டதாகவும், அதன் பிறகு ஜூனியர் என்டிஆர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு திரும்பிய நடிகர், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தன்னுக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் ஓய்வில் இருப்பதாகவும், முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply