தென்னிந்திய திரையுலகில் 40 ஆண்டுகள்.. நெகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு நன்றி கூறிய குஷ்பு!

தென்னிந்திய சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் குஷ்பு சுந்தர், திரையுலகில் 40 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். 1980-களில் தொடங்கிய அவரது பயணம், இன்று வரை ரசிகர்களின் அன்புடன் தொடர்கிறது.

குஷ்புவின் கதாநாயகி அறிமுகம் 1986 ஆகஸ்ட் 14 அன்று வெளியான தெலுங்கு திரைப்படமான “கலியுக பாண்டவலு” மூலம் நடந்தது. கே. ராகவேந்திரா ராவ் இயக்கிய இந்தப் படத்தில், வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்த அவர், முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

அந்த வெற்றி தான் அவரது திரையுலக வாழ்க்கைக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்த குஷ்பு, தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

இந்த 40 ஆண்டு சாதனையை முன்னிட்டு, குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த நாற்பது ஆண்டுகளாக தன்னுடன் இருந்த ரசிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.“இந்த நீண்ட பயணத்தில் கிடைத்த அன்பும் ஆதரவும் தான் என்னை இங்கு கொண்டு வந்தது” என்ற உணர்வுடன் அவர் பகிர்ந்த பதிவு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading