“விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” வெற்றிக்காக திருப்பதியில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்த இயக்குனர் வெங்கி அட்லூரி!

சூர்யா நடித்துள்ள “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் வெற்றிக்காக இயக்குநர் வெங்கி அட்லூரி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டை அடித்து வழிபாடு செய்துள்ளார்.ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய கருப்பு படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தை வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

சூர்யாவின் 46-வது படமாக உருவாகியுள்ள இதை நாக வம்சி தயாரித்துள்ளார். மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டீசர் வெளியாகியபோது ரசிகர்களிடையே படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு உருவானது. குறிப்பாக, சூர்யா நடித்துள்ள சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரம் தன்னைவிட வயதில் இளைய பெண்ணை காதலிக்கும் கோணத்தில் அமைந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. இயக்குநர் திருப்பதியில் தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading