மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக கவனம் பெற்று வரும் நடிகைகளில் ஒருவராக அனிஷ்மா உருவெடுத்து வருகிறார். மலையாளத்தில் வெளியான பூவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தமிழில் சிறை மற்றும் யூத் படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.
இப்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “மொத ராத்திரி” திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். குட் பேட் அக்லி மற்றும் டியூட் படங்களுக்குப் பிறகு இந்த நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் படம் இதுவாகும்.ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். இசையை பரத் ஷங்கர் அமைத்துள்ளார்.
புதிதாக திருமணமான தம்பதியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.இந்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த இந்த டிரெய்லர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
