“டிசி” படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. !

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சன், இசை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்காக படம் கவனம் பெற்றுள்ளது.

படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில், “டிசி ஒரு அதிரடியான சிறந்த திரை அனுபவமாக இருந்தது. லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இணைந்து வலுவான ஆக்சன் படத்தை வழங்கியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனிருத்தை தனியாக பாராட்டிய அவர், “உங்களுக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி அதில் கம்பீரமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே ஈடு இணையற்றவர்” என்று தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading