“வடசென்னை என்றாலே அடிதடி இல்லை!” – ‘ஆல் பாஸ்’ இயக்குநர் மைதீன்!

துஷ்யந்த் மற்றும் ஜனனி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆல் பாஸ்’. மைதீன் இயக்கியுள்ள இப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் சார்பில் மோகனா.ஆர் தயாரித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்திற்குப் பிறகு இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரத் லோகித்ஷவா வில்லனாக நடிக்க, ரோஷன் பஷீர், அருவி மதன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தில்ராஜு ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு மோகன் ராஜன், நிலவை பார்த்திபன் மற்றும் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர்.

‘ஆல் பாஸ்’ குறித்து இயக்குநர் மைதீன் கூறுகையில், வடசென்னை என்றாலே அடிதடி, வெட்டு, குத்து, பகை, கொலை போன்ற பின்னணியிலேயே தமிழ் சினிமாவில் தொடர்ந்து காட்டப்பட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலிருந்து மாறுபட்டு, எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் வடசென்னையின் மக்களின் இயல்பான வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக இதை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், கதை வடசென்னையை மையமாக கொண்டதால் அப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலேயே முழு படப்பிடிப்பையும் நடத்தியதாக தெரிவித்துள்ள அவர், ‘ஆல் பாஸ்’ அக்டோபர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என கூறியுள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading