தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ், ‘காந்தா’, ‘லெனின்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ஆபரேஷன் கங்கா’ படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் அறிமுகமாகிறார். விஷ்ணு மோகன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, அர்ஜுன் ராம்பால் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.
ராணுவ பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது. அப்போது மோகன்லாலுடன் இணைந்து நடித்த அனுபவத்தை நினைவுகூரும் வகையில் அவருடன் எடுத்த புகைப்படத்தை பாக்யஸ்ரீ பகிர்ந்துள்ளார்.
மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது தனக்கு கிடைத்த வரம் போன்றது என குறிப்பிட்டுள்ள அவர், படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் அவரை கவனித்து சினிமாவை வேறு கோணத்தில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார். மோகன்லால் அற்புதமான கலைஞர் என்றும் பாக்யஸ்ரீ பாராட்டியுள்ளார்.
—
