முதல்வர் விஜய் நடித்த ‘மாண்புமிகு மாணவன்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிராஜ். பின்னர் சின்னத்திரையில் ‘தென்றல்’, ‘ஆஃபிஸ்’, ‘அழகு’, ‘தாலாட்டு’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஸ்ருதிராஜ், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி’ தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர், மருத்துவமனையில் இருந்தபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வலது காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ள ஸ்ருதிராஜ், தற்போது நலமாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Add a Comment
