ரவி தேஜா நடித்துள்ள புதிய திரைப்படமான “இருமுடி கட்டு” படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. தெலுங்கில் “இருமுடி” என்ற பெயரிலும், தமிழில் “இருமுடி கட்டு” என்ற பெயரிலும் படம் வெளியாக உள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஷிவ நிர்வாணா இயக்கியுள்ளார். பிரியங்கா பவானி ஷங்கர், சாய் குமார் மற்றும் பேபி நக்ஷத்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.
டிரைலரில் குடும்ப உணர்வு, ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரவி தேஜாவின் வழக்கமான மாஸ் பாணியுடன், புதிய முயற்சியும் இதில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஷிவ நிர்வாணா கடைசியாக இயக்கிய குஷி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதன் பிறகு உருவாக இருந்த மற்றொரு படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படம் அவரது முக்கியமான ரிலீஸாக பார்க்கப்படுகிறது.“இருமுடி கட்டு” வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
