மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காதல் காவியம் “இதயத்தை திருடாதே”. 1989-ல் நாகர்ஜுனா மற்றும் கிரிஜா ஷெட்டர் நடித்த இந்தப் படம், தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இது தெலுங்கில் வெளியான “கீதாஞ்சலி” திரைப்படத்தின் தமிழ் பதிப்பாகும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் குறைந்து விட்டதை அறிந்திருக்கும் இளம் ஆண் மற்றும் பெண் இடையே மலரும் காதலை மிகவும் உணர்ச்சிகரமாக படம் எடுத்திருந்தார் மணிரத்னம். அதனால் இந்தப் படம் இன்று வரை பலரால் நினைவுகூரப்படுகிறது.
இளையராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் காலத்தால் அழியாதவை என சொல்லப்படுகின்றன. குறிப்பாக “ஓ பிரியா பிரியா” மற்றும் “ஓ பாப்பா லாலி” பாடல்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன. பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவான காதல் காட்சிகளும் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தன.தேசிய விருதும், நந்தி விருதுகளும் பெற்ற இந்த கிளாசிக் படம் தற்போது புதிய தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, 37 ஆண்டுகளுக்குப் பிறகு “இதயத்தை திருடாதே” திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
