துல்கர் சல்மான் நடித்துள்ள ஆக்ஷன்-திரில்லர் திரைப்படமான “ஐ ஆம் கேம்” முதலில் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதிக்கட்ட பணிகள் தாமதமானதால், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தன.
இப்போது அந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, “ஐ ஆம் கேம்” வரும் செப்டம்பர் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மிகப் பெரிய அளவில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது.‘ஆர்டிஎக்ஸ்’ புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இந்தப் படத்தில், துல்கர் சல்மானுடன் கயாடு லோஹர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
