“பௌசி” கிளிம்ப்ஸுக்காக காத்திருக்கும் பிரபாஸ் ரசிகர்கள்… எப்போது ரிலீஸ்?

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் பெரிய படங்களில் ஒன்றான “பௌசி” திரைப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

தேசபக்தி மற்றும் தாய்நாடு சார்ந்த கதைக்களம் கொண்டதாக கூறப்படும் இந்தப் படத்திலிருந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் இதுவரை தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்தப் படம் 2026 டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இமான்வி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையை விஷால் சந்திரசேகர் அமைத்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading