Advertisement

32 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ‘பண்டிட் குயின் 2’!

1994-ல் வெளியான ‘பண்டிட் குயின்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹனி தெரான் இயக்கும் இப்படத்தை முதல் பாகத்தைத் தயாரித்த பாபி பேடியே தயாரிக்கிறார். பூலான் தேவி காவல்துறையில் சரணடைந்து, 11 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த காலகட்டத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களையும், சமூக மாற்றத்துக்கான அவரது பயணத்தையும் இரண்டாம் பாகம் மையமாகக் கொண்டு உருவாகிறது.

Add a Comment

Leave a Reply