அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராம்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ஓம் திரைப்படம் நவம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் முன்பு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கோபமாகப் பேசியதன் பின்னணியை ராஜ்குமார் பெரியசாமி விளக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் வில்லு திரைப்படம் வெளியான காலகட்டத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, விஜய் திடீரென கோபமடைந்து அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சத்தமாகக் கூறினார். இந்தச் சம்பவம் அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக அமைதியான குணம் கொண்ட விஜய் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்ற கேள்வியும் எழுந்தது. இதுகுறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அந்தச் சம்பவம் நடந்தபோது, நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் இரும்பு மேசைகள் மற்றும் நாற்காலிகளை நகர்த்தி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஏற்படுத்திய அதிகப்படியான சத்தம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனால் பொறுமையிழந்த விஜய், “பேசிகிட்டு இருக்கேன்ல.. சைலன்ஸ்” என்று சற்று கோபத்துடன் கூறியிருக்கிறார். படங்களின் தோல்வியோ, அதனால் ஏற்பட்ட மன அழுத்தமோ அவரது பேச்சுக்குக் காரணமல்ல என்றும், அன்றைய சூழலில் ஏற்பட்ட சத்தமே அதற்குக் காரணம் என்றும் ராஜ்குமார் பெரியசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.
