அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள “டிசி” திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆகஸ்ட் 7, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஹீரோ அறிமுகம் என்பதால் ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பைப் பெற்ற படம், தற்போது உலகளாவிய வசூலில் ₹50 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதிரடி ஆக்ஷன் பாணியில் உருவான விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜின் எமோஷனல் மற்றும் ஆக்ஷன் கலந்த நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அழுத்தமான நடிப்பும் பாராட்டுகளை பெற்றுள்ளது. குறிப்பாக அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகளின் அமைப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநராக ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த லோகேஷ், நடிகராகவும் இந்தப் படத்தின் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாக திரையுலகில் பேசப்படுகிறது. பல முன்னணி பிரபலங்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
