‘ராமாயணா’ படத்தில் ஜடாயு கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்துள்ள அனுபம் கெர், ராவணனுடன் போரிட்டு மடியும் காட்சியில் வரும் ‘ஹே ராம்’ வசனத்தைச் சரியாகப் பேசுவதற்காக சுமார் 200 முறை பயிற்சி செய்ததாக கூறியுள்ளார். குறிப்பாக அந்தச் சண்டைக் காட்சிகளைப் பார்த்து வியந்த அவர், பிரம்மாண்டத்தை உணர்ந்ததால் முதல் நாள் டப்பிங் பணியை ஒத்திவைத்து மறுநாள் வந்தாராம். வழக்கமாக 20 நிமிடங்களில் முடியும் சிறிய டப்பிங் பணிக்குப் பதிலாக, ஜடாயுவின் மரணக் காட்சிக்கான 10 முதல் 12 வரிகளைத் துல்லியமாகப் பதிவு செய்ய ஐந்து முதல் ஆறு மணி நேரம் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Add a Comment
