நிவின் பாலியின் 51வது படத்தில் இணைந்த ருக்மிணி வசந்த்… மலையாள சினிமாவில் என்ட்ரி!

கன்னட திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை ருக்மிணி வசந்த், தற்போது மலையாள நடிகர் நிவின் பாலியின் 51வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

‘சார்லி’ மற்றும் ‘நையாட்டு’ போன்ற படங்களை தயாரித்த மார்ட்டின் பிரக்கத் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ‘ஜய ஜய ஜய ஜய ஹே’ படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான நாஷித் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

புதிய படத்தில் இணைந்தது குறித்து ருக்மிணி தனது சமூக வலைதளத்தில், “நீண்ட காலமாக தூரத்திலிருந்து ரசித்த ஒரு திரையுலகில் இப்போது ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ படத்திலும் ருக்மிணி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி உள்ளிட்டோரும் நடித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 26 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading