சிவகார்த்திகேயனின் “சேயோன்” படத்தில் நடிக்கிறாரா சீமான்? உலாவும் புது தகவல்!

“அமரன்” வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது படம் “சேயோன்”. “தாய் கிழவி” இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மதுரையை பின்னணியாகக் கொண்ட கிராமத்து கமர்ஷியல் கதையாக படம் உருவாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸே கதாநாயகியாக நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் முடிந்த நிலையில், கன்னட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டியும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார்.

இன்று முதல் மதுரையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஊட்டியில் ஓய்வில் இருந்த சிவகார்த்திகேயன், சென்னை வழியாக மதுரைக்கு சென்று படக்குழுவுடன் இணைந்தார். பல முக்கிய ஆக்ஷன் மற்றும் குடும்பக் காட்சிகள் அடுத்த கட்டமாக படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

படக்குழுவின் தகவல்படி, “சேயோன்” இந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற தகவலும் தற்போது பேசப்பட்டு வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading