சூர்யா நடித்துள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி அளித்த பேட்டியில், தனது ஆரம்பகால நடிப்பு வாழ்க்கையை பாதித்த ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
“நான் நடிகராகப் போகிறேன் என்பதை படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புவரை கூட நம்பவில்லை. அப்பா சிவக்குமார் நினைவாற்றலை வளர்க்க பல பயிற்சிகள் கொடுத்தார். ஆனால் ஒரு சம்பவம் என் சிந்தனையை முழுவதுமாக மாற்றிவிட்டது” என்று சூர்யா கூறினார்.
ஒரு நண்பருடன் அமைச்சர் ஒருவரை சந்திக்கச் சென்றபோது, நீங்கள் சிவக்குமார் போலவே இருக்கிறீர்கள். அவரைப் போலவே நடிப்பீர்கள் அல்லவா? என்று அவர் கூறியதாக சூர்யா தெரிவித்துள்ளார். “அந்த வார்த்தைகள் என்னை ஆழமாக பாதித்தது. அதற்குப் பிறகு அப்பா நடித்த படங்களை கூட பார்க்காமல் இருந்தேன். அவரின் பாவனை, குரல், நடிப்பு எதுவும் என்னிடம் தெரியாமல் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். அப்போது எனக்கு 22 அல்லது 23 வயதுதான். அதன்பிறகுதான் அப்பாவின் பாணியை பின்பற்ற கூடாது எனக்கென தனி நடிப்பு பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் என்றார்.
