வரவேற்பைப் பெற்றதா தமன்னாவின் ‘The Vvaan’ திரைப்படம்?

தமன்னா மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இணைந்து நடித்துள்ள ‘The Vvaan: Force of the Forrest’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. தீபக் குமார் மிஸ்ரா மற்றும் அருணாப் குமார் இணைந்து இயக்கியுள்ள இப்படம் ஹாரர், திரில்லர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்களுடன் உருவாகியுள்ளது.

பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தரப்பில் கலவையான கருத்துகள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், திரையரங்க வசூலில் ஓரளவு வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் வெளியாகி நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் உலகளாவிய வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘The Vvaan: Force of the Forrest’ திரைப்படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ.45 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading