‘டிமான்டி காலனி 3’ மீதான இடைக்காலத் தடை ரத்து – விரைவில் புதிய ரிலீஸ் தேதி?

அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 3’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. முதல் இரண்டு பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மூன்றாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை ஜீ5 கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. முதலில் செப்டம்பர் 11-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படத்தின் இணை தயாரிப்பாளரான விஜயா சுப்பிரமணியன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தங்களது கவனத்திற்கு வராமல் ஓடிடி உரிமம் வழங்கப்பட்டதாகவும், தங்களுக்கு தெரியாமல் படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் வெளியீட்டுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது ‘டிமான்டி காலனி 3’ படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால் படத்தை வெளியிடுவதற்கான தடைகள் நீங்கியுள்ள நிலையில், புதிய ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading