பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வாமிகா கபி, சிறுவயதிலேயே சில ஹிந்தி படங்களில் தோன்றியவர். பின்னர் பஞ்சாபி திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
தமிழில் அவர் முதன்முறையாக 2016-ல் வெளியான “மாலை நேரத்து மயக்கம்” படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் கவனம் செலுத்திய வாமிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது “டிசி” திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்தித்துள்ளார்.
இந்தப் படத்தில் “சந்திரா” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டருக்கு நேரில் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்த வாமிகா, அவர்களிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றார். தற்போது “டிசி” 50 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழில் ரவி மோகன் நடிக்கும் “ஜீனி” படத்திலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
