நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி சிங் சூர்ப்பனகையாகவும் நடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர். ஏற்கனவே வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் படத்தின் பிரம்மாண்டத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நேற்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடிய ரன்பீர் கபூருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், ‘ராமாயணா’ படக்குழுவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது. இதையொட்டி, படப்பிடிப்பு தளத்தின் BTS வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
—
