“டிசி” வெற்றிக்குப் பிறகு மீண்டும் லோகேஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணியா?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள “டிசி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் 50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் மீண்டும் அருண் மாதேஸ்வரனின் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது லோகேஷ், அல்லு அர்ஜூனை வைத்து இயக்கவுள்ள படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படம் முடிந்த பிறகோ அல்லது அதனுடன் இணைந்தே இந்த புதிய படம் தொடங்கலாம் என்ற தகவல்களும் பரவி வருகின்றன.

இருப்பினும், இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. லோகேஷின் அடுத்தடுத்த இயக்குநர் திட்டங்களில் “கைதி 2” உள்ளிட்ட படங்களும் உள்ளதாக கூறப்படுவதால், இந்த கூட்டணி மீண்டும் உருவாகுமா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading