அருண் விஜய் – முத்தையா கூட்டணியில் புதிய படம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருண் விஜய், தற்போது தனது 38-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்குகிறார். இந்த புதிய கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

முத்தையாவின் ஸ்டைலில் கிராமத்து உணர்வுகளும், குடும்ப செண்டிமெண்டும், அதிரடி சண்டைக் காட்சிகளும் கலந்த கதையாக படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கதைக்கேற்ற வகையில் அருண் விஜய் தனது உடல் அமைப்பை மேலும் கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை மிர்ணா நடிப்பதாக கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தை நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது படத்தின் முக்கிய ஆக்‌ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தென்காசி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும் வகையில், படத்தின் தலைப்பும் முதல் தோற்றமும் வருகிற 12-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading