சமீபத்தில் வெளியான “கருப்பு” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது அவர் புதிய படங்களில் நடிப்பதுடன், புதிய கதையொன்றையும் எழுதிக் கொண்டு வருகிறார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம், “எல்.கே.ஜி. போல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு சிரித்தபடி பதிலளித்த ஆர்ஜே பாலாஜி, “அரசியலுக்கு போகும் எண்ணமே எனக்கு இல்லை. அந்த வழியில் செல்ல வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை” என்றார்.
மேலும், “முன்பு நான் சீக்கிரம் கோபப்படுவேன். இப்போது வாழ்க்கையை கொஞ்சம் அமைதியாகப் பார்க்க கற்றுக்கொண்டிருக்கிறேன். வயதோடு பக்குவமும் வந்திருக்கிறது” என்றும் கூறினார்.அவரது இந்த பதில் தற்போது ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
