“என் பேரனைப் பார்க்க முடியவில்லை!” – முதல்வர் விஜய்யை சந்திக்க முடியாமல் வருத்தப்பட்ட ‘சிட்டுக்குருவி பாட்டி’

மதுரையைச் சேர்ந்த சீனியம்மாள், ரசிகர்களால் ‘சிட்டுக்குருவி பாட்டி’ என்று அழைக்கப்படும் பிரபல துணை நடிகை. தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கவனம் பெற்ற இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். ‘மெர்சல்’ படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களிடம் மேலும் பிரபலமான சீனியம்மாள், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

மதுரையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விஜய் சென்றிருந்த நிலையில், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறவில்லை என சீனியம்மாள் தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், விஜய் முதலமைச்சராக இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனது ‘பேரனை’ நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் கூறியுள்ளார். மதுரைக்கு அவர் வந்திருந்தபோதும் தன்னால் நேரில் சென்று சந்திக்க முடியவில்லை என்றும், அடுத்த முறை எப்படியாவது அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் சீனியம்மாள் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply