அமெரிக்காவில் புதிய சாதனை படைக்கப்போகும் யஷின் “டாக்சிக்”!

யஷ் நடிப்பில் உருவாகியுள்ள “டாக்சிக்” திரைப்படம் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் வெளியாகத் தயாராகி வருகிறது. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, அமெரிக்கா முழுவதும் சுமார் இரண்டாயிரம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக இந்தியப் படங்களுக்கு அமெரிக்க சந்தையில் அதிக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், பெரிய திரையரங்கு வலையமைப்புகளைப் பெறுவதற்கான போட்டியும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், “டாக்சிக்” மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகும் இந்திய திரைப்படங்களில் ஒன்றாக சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யஷ் உடன் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுடாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் உட்பட பல இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் படம் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading